முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு? தீர்மானம் குறித்து இன்று அறிவிக்கப்படும்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் 20ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.


எனினும் கட்சிக்குள் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒரு தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாகவும், பிறிதொரு தரப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறும் கூறியதாக கூறப்படுகிறது.