சீனாவிடம் இருந்து 4 பில்லியன் டொலர் கடன் கோரும் இலங்கை

நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.


இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது மிக விரைவில் கிடைக்கப்பெறும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.