மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை!


நிலையான அரசாங்கம் ஒன்றை விரைவில் அமைக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்து நாடு இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். 


பீபீசி நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நியச் செலாவணியை தேடிக்கொள்வதில் பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.