4708 வாகனங்கள் QR குறியீட்டின் கீழ் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றன -அமைச்சர் காஞ்சன

 

-சி.எல்.சிசில்-


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், QR குறியீட்டின் கீழ் 20 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.


4708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.


இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் 25 இடங்களில் எரிபொருள் சோதனைகளை மேற்கொள்ளவிருந்த போதிலும், ஓர்டர்கள் வழங்கப்படாமை, தாமதம் மற்றும் விநியோகக் குறைபாடுகள் காரணமாக 05 இடங்களைப் பரிசோதிக்க முடியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அந்த 05 இடங்களும் அடுத்த இரண்டு நாட்களில் செய்யப்படும்.