60 லட்சம் தடுப்பூசிகளை மியன்மாருக்கு நன்கொடையாக வழங்கும் இலங்கை!

நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 6 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை மியன்மாருக்கு நன்கொடையாக வழங்க இலங்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலையீட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


COVID தடுப்பூசி திட்டத்திற்காக இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் காலாவதியாவதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.