ஒரு லீற்றர் பெற்றோல் 2000 ரூபாவுக்கு விற்பனை


-சி.எல்.சிசில்-


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குருநாகலில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் விலையை உயர்த்தி விற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகரித்து எரிபொருளை அநியாயமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.