ஜனாதிபதியின் ராஜினாமா அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பைம், நாட்டுப் பற்றையும் காட்டுகிறது... எதிர்காலத்தில் அவரின் பெறுமதியை இந்த சமூகம் விளங்கிக் கொள்ளும்.


கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.


30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில் எவ்விதமான சந்தேககமும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


/chat.whatsapp.com/Kv5HRUuuk U98aIf0PZ4g7B