அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா!


கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த அமரவீர தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 


இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கொண்டுவரப்படும் உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதேவேளை, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக நேற்றிரவு அறிவித்தனர். 


அதேபோல், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார். 


மேலும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.. 


புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களினதும் மதத் தலைவர்களினதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது பங்களிப்பை செலுத்த உள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.