பங்காளிகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஒன்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்தித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக பத்திரன உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


பங்காளிக் கட்சிகள் சார்பில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி ஜி வீரசிங்க, பிரேமநாத் டோலவத்த, வீரசுமண வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க,  , அசங்க நவரத்ன உட்பட குழுவினரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி வாக்கெடுப்பில் தானும் பங்குபெறவுள்ளதால் கட்சித் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என, சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.