கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது.


கடந்த ஜூலை 13ஆம் தேதி நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட சமூக வலைதள ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது செய்யப்பட்டார்.


பத்தும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) இன்று கைது செய்யப்பட்டார்.


ஆர்ப்பாட்டத்தின் போது பொல்துவ சந்திக்கு அருகில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதியில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்