அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மீண்டும் கொவிட்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அலுவல பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.