கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசாவிற்கான சமீபத்திய கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது, பதவியை விட்டு விலகுவதாக உறுதியளித்து, முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில் " நாட்டை விட்டு தப்ப முயற்சிகள் மேற்கொள்வதாக " ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி தி ஹிந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபக்ச, 2019 தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வெளிநாட்டுப் பிரஜை சட்டத்தின் காரணமாக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்.


பின்னர் அவர் பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்,


ஆனால் நாட்டு மக்களை கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்கிய பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ஆனார்.



"சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு பிறகு அவர் அமெரிக்காவிற்கு சென்று குடியேற முயற்சிகளை மேற்கொண்டர்.


ஆனால் அது மறுக்கப்பட்டது" என்று கொழும்பை தளமாகக் கொண்ட அதிகாரி செவ்வாயன்று கூறியதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா முடிவைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது,


நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு அவரது தோல்வியுற்ற ஆட்சியை எதிர்த்து, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், . கோட்டாபயவை ராஜினாமா அறிவித்தல் கொடுக்கும் நிலைக்கு உள்ளாக்கினார்கள்


சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.


News : தி இந்து