துருக்கியின் விமானத்துக்கு இலங்கையில் கிடைத்த அதிர்ச்சி.

 

 துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த A-330-300  ரக விமானதுடன்  அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த  கொள்கலன் வண்டி விமான இன்ஜினுடன் மோதியதில் இன்ஜின் பகுதி  சேதத்துக்குள்ளானது.  இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 


கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 45 மெட்ரிக் தொன் எடையுள்ள "விக்டோரியாஸ் சீக்ரெட் ஸ்டோர்ஸ்" தயாரித்த ஆடைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.


அப்போது கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதியில் பலத்த காற்று வீசியதால் இந்த விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலனை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான நிலைய அதிகாரிகள் உரிய முறையில் தடுப்பு  போடாமல் உரிய விமானத்திற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கொள்லன் வண்டி  விமானத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அதன் வலது  பக்க இயந்திரத்தில் கடுமையாக மோதியதில்  சேதம் ஏற்பட்டுள்ளது.  


இந்த விமானத்தின் இன்ஜின் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக  குறித்த விமானம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை கையாளும் பணியாளர்களால் திறமையற்ற மற்றும் பொறுப்பற்ற தரை கையாளுதல் மற்றும் விமான நிலையத்தில் அவர்கள் விமானங்களுக்கு எரிபொருள் பெற முடியாது என்பதால், துருக்கிய ஏயார்லைன்ஸ் அதிகாரிகள் தற்போது  விமான நடவடிக்கைகளை இடைநிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.