நாமலின் துணைவி, பிரான்ஸுக்கு சென்றார்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் துணைவியார் லிமினி ராஜபக்ஷ தமது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார்.


லிமினியும் அவரது குழந்தையும் அதிகாலை 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூருக்கும் பின்னர் அங்கிருந்து பிரான்ஸுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய தரப்புக்கள் தெரிவித்தன.


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.