எரிபொருள் இல்லாததால் முடங்கிப்போன எம்.பி.க்கள்-சி.எல்.சிசில்-


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வர முடியாமல் கிராமப்புறங்களில் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக வெளியே சென்றவர்களும் எரிபொருள் பற்றாக்குறையால் அந்தப் பகுதிகளில் சிக்கியுள்ளனர்.


இந்நிலையில், சில எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக நண்பர்களின் வாகனங்களிலும், பேருந்து, ரயில்களிலும் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் மற்றவர்கள் எரிபொருளைச் சேமிக்கும் நம்பிக்கையில் நாடாளுமன்றத்தின் ஒரு அமர்வில் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.