வாகனங்களுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் அறிமுகமாகிறது.

வாகனங்களுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


'தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு' வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


உத்தரவாதமான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்படும். ஒரு அடையாள அடடைக்கு ஒரு வாகனம் , வாகன எண் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும்.


QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் நாட்கள் பிரிக்கப்படும் ” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.


இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.