கையெழுத்திட்டார் கோட்டா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தவுடன், புதிய ஜனாதிபதியை நியமிப்பது தொடர்பான பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை (13) ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் நாளை (13) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய, இன்று (12) கையொப்பமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஜனாதிபதி கையளித்த பின்னர்,

விசேட அறிவிப்பை வெளியிட்டு நாளை (13) நாட்டு மக்களுக்கு இவ்விடயத்தை சபாநாயகர் அறிவிப்பார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.