ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்கின்றது தொல்பொருள் திணைக்களம் !
தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளது.அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் கலாசார மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளை மதிப்பீடு செய்யவுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் திணைக்களம் தொல்பொருட்கள் மற்றும் கலாச்சார சொத்துக்களை வைத்திருக்கவில்லை.

இருப்பினும் பொருட்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு அதில் இல்லாத பொருட்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.