அனைத்து மக்களையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் – பிரதமர்


நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சகல பிரஜைகளையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.


சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பர் என தெரிவித்தார்.


பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் முடிவுக்கு தாங்களும் கொள்கையளவில் உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.


அனைவரும் பொதுவான திட்டத்தின் கீழ் பணிபுரிந்தால் நாட்டுக்கு மேலதிக சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.