சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியுடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்

சர்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் இடையில் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


மக்கள் விடுதலை முன்னணியை தவிர, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 11 சுயேச்சைக் கட்சிகள் மற்றும் தமிழ்த் தலைவர்கள் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.


சர்வகட்சி ஆட்சிக்கான கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய அறிக்கையும் இன்று அனைத்து தரப்பினரிடமும் கையளிக்கப்படவுள்ளது.


அனைத்துக் கட்சி ஆட்சிக்கு ஆதரவளிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி முன்னர் தெரிவித்திருந்தது.