எனது சொந்த பணத்திலேயே நான் வெளிநாட்டில் தங்கி இருக்கிறேன் ; கோட்டா


தான் தனது  சொந்த பணத்திலேயே வெளிநாட்டில் தங்கி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


கோத்தாபய ராஜபக்‌ஷ வெளிநாட்டில் தங்கி இருக்க அரசு செலவிடவில்லை என கூறப்படும் நிலையில் மாலைதீவு சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தங்கியிருக்க தான் தனது  சொந்த பணத்தினையே செலவிட்டதாக கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.