குருநாகலில் இறைச்சிக் கடைகளை திறக்க மீண்டும் அனுமதி!

 


குருநாகல் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக் கடைகளைத் திறப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. 


குருநாகல் மாநகர சபை உறுப்பினர் முகம்மது அஸாருதீன் திங்கட்கிழமை காலை (15) இறைச்சிக் கடைகளைத் திறப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்வைத்தார். பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் நலன் கருதி, மாடு அறுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தையும் சபை அமர்வின் போது அவர் தெளிவுபடுத்தினார். மாநகரசபை அமர்வுக்கு அன்று சமூகமளித்திருந்த 18 உறுப்பினர்களும் மேற்படி தீர்மானத்துக்கு ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். 


இதன்மூலம், குருநாகல் மாநகரசபைக்கு உட்பட்ட 7 இறைச்சிக் கடைகளையும் மீண்டும் திறப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர் அஸாருதீன் தெரிவித்துள்ளார். 


கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மாடறுப்பதற்கு இப்பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.