மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது ; உணவக உரிமையாளர்கள் தெரிவிப்பு


 மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும்


அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 


“அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் அதன் பலனை நுர்வோர் அனுபவிக்கும் வகையில் பொறிமுறையொன்றை நுகர்வோர் அதிகார சபை ஏற்படுத்தவேண்டும்” என்று அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார். 


குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் யோகட், ஐஸ்கிறீம், குளிரூட்டப்பட்ட பானங்கள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட இன்னும் பல உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவேண்டிய நிலை​மை, இந்த மின் கட்டண அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


பருப்பு, சீனி உள்ளிட்ட இன்னும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறைக்கப்படவில்லை. ஆகையால், உணவகங்களில் விலைகள் குறைக்கப்படவேண்டுமாயின், விலை குறைப்பு, நுகர்வோரை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.