இலங்கைக்கு பாப்பரசரிடமிருந்து நான்கு கோடி ரூபா நிதி உதவி

 
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இலங்கைக்கு 100,000 யூரோக்கள் வழங்க பரிசுத்த பாப்பரசர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது இலங்கை ரூபாயில் சுமார் 400 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையை 3 பகுதிகளாகப் பிரித்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க கொழும்பு பேராயர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.