பாராளுமன்றம் 29ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது – மதிய உணவு இடைவேளை அரை மணி நேரம் மட்டுமே

பாராளுமன்றத்தை 29 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து பகல் இடைவேளையை அரை மணித்தியாலமாக மட்டுப்படுத்தி மதியம் 12.30 மணி முதல் 1 மணிவரை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடி சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நடத்தவுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் மின்கட்டண அதிகரிப்பு குறித்து சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.