கொரோனா மரணங்கள் கூடின


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.


ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று அறுவர் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய கொரோனா தொற்றாளர்கள் 214 பேர் இன்று (09) இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.