தாமரை கோபுரத்தில் நாளாந்தம் 41 ஆயிரம் டொலர்கள் வருமானம்! ஐந்தே வருடங்களில் கடனை மீளச் செலுத்த முடியும்!
நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை ஐந்து வருடத்தில் மீள செலுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க 105 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
பாரியளவில் சுற்றுலா வருமானத்தினை ஈட்டும் நாடொன்றிலேயே இதுபோன்ற தாமரைக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
குறைந்த அந்நிய செலாவனியை பெறும் இலங்கை போன்ற நாடுகள் இதுபோன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களில் தாமரைக்கோபுரத்திற்கான கடனை எந்தவகையிலும் செலுத்துவதற்கான சாத்தியம் இல்லை எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.