63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் – விவசாய அமைச்சர் இதனை மறைக்கிறார்: சஜித்


இந்நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக தெரிவித்து உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையை விவசாய அமைச்சர் மறைத்து செயற்படுகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.


மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக தாம் ஒரு போதும் கூட்டு அரசாங்கத்தினை அமைக்கப்போவதில்லை.


அது மாத்திரமின்றி மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டு ஒருபோதும் அதனை காட்டிக்கொடுக்கும் திட்டங்களை முன்னெடுக்கப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.