ரூ. 70 சவர்க்காரத்தின் விலையை 170 ரூபாவாக மாற்றி விற்பனை செய்த வர்த்தகர் கைது

 


70 ரூபாவாக இருந்த சலவை சவர்க்காரத்தை 170 ரூபாவிற்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று(06) பிற்பகல் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த விற்பனையாளர் சவர்க்காரப் பொதியில் குறிப்பிட்டிருந்த விற்பனை விலையை நீக்கிவிட்டு 170 ரூபா என பலகையில் குறிப்பிட்டு இவ்வாறு சவர்க்காரத்தை விற்பனை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.