தென்னிலங்கையில் இடம்பெற்ற தொடர் கொலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணை


இலங்கையின் தென்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் கொலைகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு விசேட குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


11 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.