சீனியும் சிக்கியது இருவரும் சிக்கினர்


பேலியகொடை பிரதேசத்​தில் களஞ்சிய சாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத 3,000 கிலோகிராம் சீனி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று  (26) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போதே சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 48 வயதானவர்கள் என்றும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளது. 


கைது செய்யப்பட்ட இவ்விருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, பேலியகொடை பொதுமக்கள் பரிசோதனை காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அந்த களஞ்சியசாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.