குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

மேலும் மாவட்ட அளவில் பெண்களுக்கான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
குடும்ப வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு 1938 என்ற தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் குறித்த சேவை 24 மணி நேரமும் இயங்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.