சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

 

சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினைக் கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளது.


பெண்ணின் உறவினர்கள் சடலத்தை அடையாளங்காட்டியதுடன் அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்ற ஒரு பிள்ளையின் தாயார் எனவும் சடலமாக மீட்கப்பட்டவர் ஓர் ஆசிரியை எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளார். இம்மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.