பொருட்களின் விலை குறைப்பு



லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (07) முதல் குறைத்துள்ளது.


குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகளின் பட்டியல்


* ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 395 ரூபாவாகும்.


* ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை, 650 ரூபாவாகும்.


* ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 398 ரூபாவாகும்.


* ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 220 ரூபாவாகும்.


*இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாடு 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை 174 ரூபாவாகும்.


* ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூபாவால் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 278 ரூபா வெள்ளை சீனியின் தற்போது 275ரூபாவாகும்.