கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு


2022 ஜனவரி முதல் ஜூலை வரையில் மட்டும் 224,915 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.


இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் எண்ணிக்கை ஆகும்.


செப்டெம்பர் 30 அன்று இந்த எண்ணிக்கை மேலும் 233,756 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இலங்கை குடிவரவுத் திணைக்களம் தற்போது மாதமொன்றுக்கு சராசரியாக 78,000 கடவுச்சீட்டுகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.


அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 5,90,260 ஆகும்.