லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

 
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், எரிவாயு விலையை உயர்த்தப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அதன் தலைவர் முதித்த பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, தற்போது வரை இருந்த எரிவாயு விலை, அவ்வாறே தொடரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.