ஹஜ் கடமைக்காக 105 முகவர்கள் – இலங்கையிலிருந்து 3500 பேருக்கு சந்தர்ப்பம்


இம்முறை ஹஜ் கடமைக்காக 105 முகவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


திணைக்களத்தின் இணையத்தளத்தில் முகவர்கள் தொடர்பில் தகவல் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் மாத்திரம் ஹஜ் பயணத்திற்கான வேலைகளை முன்னெடுக்குமாறும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைவர் இஸட்.ஏ.எம். பைசல் தெரிவித்தார்.


இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து 3500 பேருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே முற்பணம் செலுத்தி பதிவு செய்தவர்கள் மிக விரைவில் தமது பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் புதிதாக பதிவு செய்ய விரும்புவோரும் விரைவில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.