ஹஜ் ஏற்பாடுகளுக்கு 105 முகவர்கள் நியமனம் : கட்டண விபரம் விரைவில் வெளியிடப்படும்


2023 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்­திரை தொடர்­பான பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 105 ஹஜ் பயண முக­வர்­களை உத்­தி­யோ­பூர்­வ­மாக நிய­மித்­துள்­ளது.


அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­ கொண்­டுள்ள ஹஜ் முக­வர்­களை மாத்­திரம் ஹஜ் யாத்­தி­ரிகர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என திணைக்­களம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.


குறிப்­பிட்ட 105 ஹஜ் பயண முக­வர்­களைத் தவிர ஏனைய ஹஜ் முக­வர்­க­ளுக்கு கட­வுச்­சீட்­டையோ ஹஜ் கட்­டண முன் பணமோ வழங்­க­வேண்டாம் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.


அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களைத் தவிர ஏனைய முக­வர்­க­ளுடன் மேற்­கொள்­ளப்­படும் பதி­வுகள், கட்­ட­ணங்­க­ளுக்கு திணைக்­களம் பொறுப்­புக்­கூற மாட்­டாது எனவும் அவர் தெரி­வித்தார்.


அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள 105 ஹஜ் பயண முக­வர்­களின் பெயர் விப­ரங்களை திணைக்­க­ளத்தின் இணை­யத்­தளம் மற்றும் பத்­தி­ரிகை விளம்­ப­ரங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.


இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில் இது­வரை ஹஜ் யாத்­தி­ரைக்கு சுமார் 3000 பேரே விண்­ணப்­பித்­துள்­ளனர். எனவே ஹஜ் யாத்­தி­ரையை திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் உட­ன­டி­யாக திணை­கத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் வேண்­டி­யுள்ளார்.


அத்­தோடு 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி ஹஜ் யாத்­தி­ரைக்கு பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்கள் தங்­க­ளது பய­ணத்தை தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.


ஹஜ் கட்­டணம் தொடர்­பான விப­ரங்கள் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.


Vidivelli