முஷர்ரபை முஸ்லிம்களின் எதிரியான பா.ஜ.கவினர் கௌரவித்தது ஏன்..?

 


தற்போது பா.உறுப்பினர் முஷர்ரப் இந்தியாவில் கௌரவிக்கப்பட்ட விவகாரம் பாரிய பேசு பொருளாக உள்ளது. சில கௌரவங்கள் ஆளுமையின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. எல்லா கௌரவங்களும் ஆளுமையின் வெளிப்பாடல்ல. குறித்த பா.உறுப்பினர் முஷர்ரபின் கௌரவம் எத்தகையது என பார்ப்பது மிகவும் அவசியமானது. அக் குறித்த நிகழ்வுக்கு அதிதியாக வருகை தந்தவர்களை ஆராய்ந்து பார்ப்பதனூடாக இதிலுள்ள ஆபத்தை எம்மால் அறிந்துகொள்ள முடியும்.


இக் குறித்த நிகழ்வின் பிரதான அதிதியாக இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டிருந்தார். இவர் யார் தெரியுமா? இவர் முன்னாள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் ஆவார். பா.ஜ.க என்பது இந்தியாவில் நாளாந்தம் முஸ்லிம்களின் இரத்தை குடித்துகொண்டிருக்கும் RSS அமைப்பை பிரதானமாக கொண்டு இயங்கும் ஒரு கட்சியாகும். இந்த பாரதிய ஜனதா கட்சியினால் ( RSS அமைப்பு ) இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அநியாயம் நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை. இப்படியானவர்களை முதன்மையாக கொண்டு நடத்தும் நிகழ்வில், அவர்கள் ஏன் முஷர்ரபை கௌரவிக்க வேண்டும் என்பது ஆழச் சிந்திக்கத்தக்கதொரு விடயம்.


அண்மையில் இடம்பெற்றிருந்த, இந்திய அரசின் நன்கொடையில் யாழ்ப்பானத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார கட்டட திறப்பு விழாவில் குறித்த எல்.முருகன் என்பவர் இந்திய அரசு சார்பாக கலந்துகொண்டிருந்தார். இந்த விடயம் எல்.முருகனுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள தொடர்பை தெளிவு செய்கிறது. இவரை இலங்கை சிறுபான்மை மக்களது அரசியல் விவகாரங்களை கையாளும் மோடியின் ( RSS ) பிரதிநிதி என்றாலும் தவறாகாது. இவ் விடயத்தையும், முஷர்ரப் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதையும் இணைத்து பார்க்கும் போது, முஷர்ரப் முஸ்லிம்களின் இரத்தத்தை குடிக்கும் RSS அமைப்பின் வலைக்குள் சிக்கியுள்ளாரா என்ற நியாயமான அச்சம் எழுகிறது.


இலங்கையில் பா.ஜ.கட்சி ( RSS அமைப்பு ), தங்களது கட்சியொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. கோத்தாவின் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் மோடியின் பிரச்சாரத்தை ஒத்திருந்தது. கோத்தாவின் முஸ்லிம்களுக்கு எதிரான பல செயற்பாடுகள் RSS இன் அடியொட்டியவைகள். இவ் அமைப்பின் ஆலோசனையை பெற்றே இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல அட்டூளியங்கள் நடைபெற்றதாகவும் அந் நேரத்தில் கூறப்பட்டிருந்தது. இவ் அமைப்போடு நாம் இணைந்து பயணிக்க முடியுமா? பா.உ முஷர்ரப் இலங்கை முஸ்லிம்களுக்கு சொல்லொன்னா துயரத்தை கொடுத்த கோத்தாவோடு இணைந்து பயணித்ததால், அவருக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் இரத்தத்தை குடித்துகொண்டிருக்கும் RSS அமைப்பினரோடு இணைந்து செயற்படுவது பெரிய ஒரு விடயமாக தெரியாமல் இருக்கிறது என்றே தோன்றுகிறது.


முஷர்ரப் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதால் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட நன்மையென்ன? இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வு போன்றவற்றுக்காக சென்றிருந்தால், நாம் அவற்றை பாராட்டியிருக்கலாம். அது கௌரவம்.. அது தேவை.. அது ஆளுமை.. முஷர்ரப், தனது சொந்த தேவைகளுக்கு கூட ஓட வாகனமில்லாமல் கஸ்டப்படுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறுவார்கள்.. நிலைமை அவ்வாறிருக்க, இவ்வாறான வெளிநாட்டு பயணங்களுக்கு அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. இல்லை.. யாராவது அவருக்கு நிதியுதவி செய்கிறார்களா என்ற கோணத்தில் பார்ப்பதும் அவசியமானது.


இவ்வாறு RSS முதன்மை படுத்தப்படும் எந்த நிகழ்வுகளிலும் இந்திய முஸ்லிம்கள் கலந்துகொள்வதில்லை. இவ்வாறான நிகழ்வுகளுக்கு முஸ்லிம் ஒருவர் ஆதரவு கொடுத்தால், அதுவும் ஒரு நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆதரவு தெரிவித்தால், அவர் தலை மீது தூக்கி வைத்து, கொண்டாடப்படுவார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அச்சப்படவே நிறய விடயங்கள் உள்ளன. சிந்தித்து செயற்படுவோம்.


ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.