தேசிய அரசில் இணைய டலஸ் தரப்பு தயக்கம்

ரணில் விக்கிரமசிங்க உருவாக்க முனையும் 'தேசிய' அரசில் இணைவதற்கு பெரமுன அதிருப்தி குழுவான டலஸ் அணி தயக்கம் வெளியிட்டுள்ளது.
தமிழ் தரப்பினரை ஒன்று படுத்த மனோ கணேசன் முயல்கின்ற அதேவேளை, சமகி ஜன பல வேகயவிலிருந்தும், பெரமுனவில் தமது எதிர்காலம் குறித்து சுயாதீனமாக சிந்திப்பவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த சூழ்நிலையில், அதிகாரம் கிடைக்கும் என்பதற்காக ஆட்சியில் பங்கெடுக்க முடியாது என டலஸ் - ஜி.எல் பீரிஸ் உட்பட்ட பதின்மூன்று பேர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.