🔴வைத்தியசாலைகளில் மனநோய்க்கு மருந்து இல்லை.மனநோய்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லை என அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார் .


இது ஒரு தீவிர சமூக ஆபத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார். .


தொடர்ந்து மனநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பது கடுமையான சமூக அவலமாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.


உடல் நோய்கள் மட்டுமின்றி மனநோய்களிலும் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


இவ்வாறான மருந்துகளுக்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிக்காததால் இநிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது அரசாங்கத்தால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.