அவிசாவெல நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயது யுவதி பலி


அவிசாவெல நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பயணித்த வேன் ஒன்று பாதை அருகில் சென்று கொண்டிருந்த யுவதியின் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் அவிசாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்துள்ளார். தெஹிஓவிட பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாகனத்தின் சாரதி அவிசாவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.