பத்திரிகை வடிவமைப்பின் மூலங்கள்

பத்திரிகை வடிவமைப்பில் எந்த விதமான சித்தாந்தங்களும் உருவாக்கப்படவில்லை. ஆனால் நீண்டகால நடைமுறை யதார்த்த்தின் ஊடாகவே கண்டறியப்பட்டது. நுண்கலையில் பிரயோகிக்கப்படும் தத்துவங்கள் இங்கு பிரயோகிக்கப்படுவதைப்பற்றி சிந்திக்கலாம். ஆனாலும் மரியோ கார்ஷிஞலின் அனுபவத்தின் வழி பின்வரும் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.
1) வாசிப்பதற்கு இலகுவாக அமையுங்கள்.
பயன்படுத்தும் எழுத்துக்களை தெளிவானதாகப் பயன்படுத்தினால் வாசிப்பதற்கு இலகுவாகும்.
2) இலகுவில் கண்டுபிடிப்பதற்கு ஏற்றவாறு அமையுங்கள்.
வாசகர்களை வழிகாட்டக்கூடிய வகையில் சுட்டிகளை அமைத்தால் அவர்கள் தமக்குத் தேவையானவற்றை தேடி எடுத்துக்கொள்வார்கள்.
3) பார்வையால் கவருவதற்கு ஏற்றவாறு அமையுங்கள்.
நல்ல விடயங்கள் உள்ளவற்றை பார்த்தவுடன் கவருவதற்கு ஏற்றவகையில் அமையுங்கள்.
இலகுவில் அதிகளவான வாசகர்கள் வாசிக்கத் தொடங்குவார்கள்.
ஒரு பலமான பக்கத்தின் தூண்கள்
1. காண்பியல் ஊடகம் செய்தியை வலுப்படுத்தும்.
படங்களும் வரைபுகளும் தெளிவாக தொடர்பு கொள்ள வேண்டும். செய்தி தெளிவாக மையப்படுத்தப்பட்டிருந்தால் படம் அதனைப் பிரதிபலிக்க வேண்டும்.
2. தலையங்கங்களும் கோடுகளும் படத்தை வலிமையாக்கும்.
வாசகர்கள் முதலில் முன்னிலையில் உள்ள படங்களைப் பார்ப்பதாகவும் பின்னர் அருகில் உள்ள தலையங்கங்களைப் படிப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. உங்களுடைய படங்களும் தலையங்கங்களும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கின்றனவா? இல்லை எனில் நல்ல வாசிப்பாளர்கள் பக்கத்தை திருப்பி விடுவார்கள்.
எதுவும் தவறவில்லை, எதுவும் விடுபடவில்லை.
செய்தி எழுதும்போதே அது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று எண்ண வேண்டும். இதில் ஓட்டைகள் அல்லது தேவையற்றவையை பின்னர் நீக்கலாம் என்று எதுவும் இருக்கக்கூடாது. மிக முக்கியமாக படத்தையும் சேர்த்து தொகுதியாக கொடுக்கும் போது பிரதான படத்தை எண்ணிக்கொள்ளுங்கள். அதுதான் பிரதான செய்தி, அல்லது பிரதான புள்ளி. அளவு மற்றும் ஒழுங்கமைப்பு பற்றித் திட்டமிடுங்கள். வாசகர்கள் இலகுவில் விடயத்தை உள்வாங்கிக் கொள்வார்கள்.
புதிய கண்டுபிடிப்பு
புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காக சும்மா எதையாவது செய்ய வேண்டாம். ஆனால் உங்கள் கதையை ஆர்வமூட்டும் வகையில் விபரிப்பதற்கு வழியை கண்டுபிடியுங்கள். அது உங்களுடைய செய்தியின் கருத்தை இலகுவில் புரிய வைத்துவிடும்.
———————————–
செய்தித்தாளின் பகுதிகள்
01) பத்திரிகையின் பெயர்
02) செய்தித் தலையங்கம்
03) உபதலையங்கம்
04) எழுதியவரின் பெயர்
05) திகதி
06) படம்/படத்திற்குரிய விளக்கம்
07) செய்திப்பகுதி
08) தகவல் வரைபுகள்