Jan 4, 2018

எச்­ச­ரிக்கும் பொலிஸ் மா அதிபர் .!குற்றப் புல­னாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு ( எப்.சி.ஐ.டி.), விசேட விசா­ரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசா­ரணைப் பிரி­வுகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் அனைத்தும் வெளிப்­படைத் தன்­மை­யுடன் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­வ­தாக  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்தர தெரி­வித்தார். 
அதே போன்று போதைப்பொருள் தடுப் புப் பிரிவு, திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் சிறப்புப் பிரிவு உள்­ளிட்ட பிரி­வுகள் ஊடா­கவும் மாவட்ட, மாகாண மட்­டங்­களில் முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரும் போதைப்பொரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களும் தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
பொலிஸார் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தா­லேயே சிறந்த அடைவு மட்­டங்­களை பெற முடி­வ­தா­கவும் எவரும் வெவ்­வேறு தேவை­க­ளுக்­காக தனித்து இயங்க முயற்­சிக்க வேண்டாம் எனவும் இதன்­போது பொலிஸ் மா அதிபர் எச்­ச­ரித்தார். 
அத்­துடன் சமூ­கத்தில் உள்ள கெட்­ட­வர்­களை வெளி­ப்படுத்­து­வது போன்றே பொலி­ஸா­ருக்குள் ஒளிந்­தி­ருக்கும் கெட்­ட­வர்­க­ளை யும் வெளிப்­ப­டுத்தி பொலிஸார் தமது தூய்மை­யான பய­ணத்தை முன்­னெ­டுத்துச் செல்லவேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
 புத்­தாண்டில் பொலி­ஸாரின் கட­மை­களை சம்­பி­ர­தாய பூர்­வ­மாக ஆரம்­பித்து வைத்தும் அரச பணி­யா­ளர்­களின் இவ்­வ­ருட பிர­க­ட­னத்தை ஏற்கும்  பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செவ்வாய்க்கிழமை  காலை நடைபெற்ற விசேட நிக்ழ்வில் கலந்­து­கொண்டு பேசும் போதே பொலிஸ் மா அதிபர் இத னைத் தெரிவித்தார்.
இதன்­போது, பொலிஸ் மா அதிபர் மேலும் தெரி­வித்­த­தா­வது, யுத்தம் நிறை­வுக்கு வந்தபின்னர் பொது மக்கள் சுதந்­தி­ர­மான சூழலை எதிர்­பார்க்­கின்­றனர். அந்த சுதந்­திர சூழலை ஏற்­ப­டுத்தும் பொறுப்பு பொலி­ஸா­ரா­கிய எம்கைகளில் உள்­ளது.  கடந்த வரு­டத்தில் எமக்கு பாரிய சவால்கள் இருந்­தன. குறிப்­பாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் எமக்கு சவால் இருந்­தது. 
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வையும் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யையும் ஒன்­றி­ணைத்து நாம் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவை ஏற்­ப­டுத்தி அத­னூ­டாக வெற்­றி­க­ர­மாக அந்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து செல்­கிறோம்.
இத­னூ­டாக போதைப்பொருள் ஒழிப்­புக்­காக   எமக்கு 50 மில்­லியன் ரூபா கிடைத்­தது. அந்­நி­தியை நாம் உரிய முறையில் பயன்­ப­டுத்­தி­யுள்ளோம்.
குற்றப் புல­னாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு ( எப்.சி.ஐ.டி.), விசேட விசா­ரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசா­ரணைப் பிரி­வுகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள அனைத்து விசா­ர­ணை­களும் வெளிப்­படைத்தன்­மை­யுடன் தொடர்ந்தும் வெற்றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. 
இந்த விசா­ர­ணைகள் தொடர்பில் நாம் தேவை­யான விசேட நிபு­ணர்­களின் உத­வி யைப் பெற்­றுள்ளோம். சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றோம்.
அதே­போன்று, மேல்  மாகா­ணத்தை  பொறுத்­த­வரை நாம் குற்றத் தடுப்பு, விசா­ர­ணை யில் பாரிய வெற்­றி­களைக் கண்­டி­ருக்­கின் றோம். இவை அனைத்தும் பொலிஸார் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­ட­மைக்கு கிடைத்தபெறு­ பே­று­க­ளாகும்.
கடந்த நாட்­களில் ஒவ்­வொரு பிரி­வி­னரும் தனித்து வெவ்­வேறு திசை­களில் செல்­வ­தாக தக­வல்கள் கிடைத்­தன. எந்த ஒரு பிரிவும் தனித்து இயங்க வேண்டாம்.  அனை­வரும் பொது நோக்­குடன் இலங்கை பொலிஸார் என்ற ரீதியில் செயற்­பட வேண்டும்.
அத்­துடன் இவ்­வ­ருடம்   பிரஜா  பொலிஸ்பிரி­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த வேண் டும். கடந்த வருடம்   இதற்கான அடித்தளம் இடப்பட்டது. இன்னும் அந்த பிரஜா  பொலிஸ் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கும் எமக்குமான உறவு வலுப்படும் போதே உளவுத் தகவல் கள் எமக்கு மென்மேலும் கிடைக்கும். எனவேஅதற்காக பிரஜா பொலிஸ் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network