ஞானசாரவின் கேம் ஓவர்!2007 முதல் இலங்கையில் தீவிர பௌத்த பேரினவாதத்தைத் தூண்டியெழுப்பி அதன் மூலம் ஏனைய இனங்களுக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கிய பொது பல சேனா பயங்கரவாதி ஞானசார வெலிக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒரு வருட சிறைத்தண்டனையை ஆறு மாதங்களில் நிறைவு செய்யும் வகையில் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஞானசார வெலிக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஏலவே, நோய்வாய்ப்பட்டிருக்கும் ஞானசார, சிறைச்சாலையில் எவ்வாறான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறார் எனும் கேள்வியும் சந்தேகமும் நிலவும் நிலையில் தண்டனை வழங்கப்பட்ட ஞானசாரவை பொலிசார் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...