போகந்தலாவ ராகுல ஹிமி தேரோ பயணித்ந வாகனம் விபத்து...!!!


நேற்று வருகை தந்திருந்த சமயத் தலைவர்களில் ஒருவரான போகந்தலாவ  ராகுல ஹிமி தேரோ  காத்தான்குடியில் இருந்து இடையில்  தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நள்ளிரவு அம்பாரை வழியாக அவரது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது


 காரை காத்தான்குடியைச் சேர்ந்த அவரது முகநூல் நண்பரே செலுத்திச் சென்றுள்ளார்


 அம்பாறைக்கு செல்லும் இடையில் இந்த கார் விபத்துக்குள்ளாகி  உள்ளாகியுள்ளது


 இதை அடுத்து இச்செய்தியைக் கேள்வியுற்ற காத்தான்குடியில் இருந்து அப்துல் மஜீத்  முகம்மத் பர்சாத் தலைமையிலான இளைஞர்கள் மற்றுமொரு வேனில் சென்று குறித்த தேரரை பாதுகாப்பாக  அவருடைய ஊருக்கு  அழைத்து சென்று விட்டுள்ளனர்.


இந்தக் கார் விபத்தில் தேரருக்கோ  காரை  செலுத்திச்  சென்றவருக்கோ  எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்