வெளியான க.பொ.த.உயர் தரப் பரீட்சை 2020 பெறுபேற்றின் படி ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவி பாத்திமா பி(B)ஸ்ருல் ஹனான் 3A சித்திகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபதாம் இடத்தைப் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு தனது இலட்சியத்தை அடைந்துள்ளார்.
(அல்ஹம்துலில்லாஹ்,
அனைத்து புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் மாத்திரமே)
இதன் மூலம் தனது குடும்பத்துக்கும் பாடசாலைக்கும் மற்றும் தனது பிரதேசமான செம்மண்ணோடைக்கும் கொளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
வாழைச்சேனை - செம்மண்ணோடை, ஆர்.டீ.எஸ் வீதி எனும் முகவரியில் வசித்து வரும் இப்றாலெப்பை (பொலிஸ் அதிகாரி), சஹானா (ஆசிரியை) தம்பதிகளின் புதல்வியான பாத்திமா பி(B)ஸ்ருல் ஹனான் சிறு வயதிலிருந்தே கற்றல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
இவரது குடும்பம் கல்வியில் சிறந்து விளங்கிய நிலையில், இவர் குடும்பத்தின் முதலாவது பொறியியலாளர் ஆவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர், மட்/செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்றதோடு, மட்/பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8A,B சித்திகளைப் பெற்றிருந்தார்.
இவ்வாறு கல்வித் துறையில் ஆர்வத்துடன் சாதனைகளை படைத்து பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் அல்லாஹ்வுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கின்றார்.

0 கருத்துகள்