காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஜிகாத் அமைப்பின் தளபதி உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த தாக்குதலில் இதுவரை காசா முனையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தளபதி ஹசம் அபு ஹர்பீட் கொல்லப்பட்டுள்ளார். இந்த ஜிகாத் அமைப்பு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜிகாத் அமைப்பின் தளபதி கொல்லப்பட்டத்தையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த குழுக்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்