இது சிங்கள அலுவலகம் ! நீங்கள் இங்கே வேண்டாம் !! கடமை ஏற்க அனுமதி மறுப்பு.. திண்டாட்டத்தில் முஸ்லிம் பெண் ..!





அம்பாறை  பிரதேச செயலகத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்க சென்ற முஸ்லிம் பெண்மணியை  கடமையேற்க விடாது பிரதேச செயலாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.


"இந்த பிரதேச செயலகம் முழுக்க முழுக்க சிங்களவர்கள் கடமையாற்றும் -  சிங்கள பிரதேச செயலகம்.  இங்கு முஸ்லிமாகிய நீங்கள் கடமையாற்ற இடமளிக்க முடியாது.

அதனால் நீங்கள் வேறிடம் சென்று கடமைமை புரியுங்கள்" என்று கூறியுள்ள பிரதேச செயலாளர் - சிங்கள மொழியில் கடிதமொன்றையும் வழங்கி திருப்பி அனுப்பியுள்ளார்.


இதனால் - குறித்த பட்டதாரியான முஸ்லிம் பெண், தனது நியமனம் மற்றும் கடமை புரிதல் தொடர்பில் பெரும் அச்சமடைந்துள்ளார். 


எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்ற தயாராக இருக்க வேண்டும் என்று - அரச ஊழியர்களிடம் உறுதியுரை பெற்றுக் கொண்டுவிட்டு - இவ்வாறு இன ரீதியாக , அரச அதிகாரியான பிரதேச செயலாளரே அதனை மீறுகின்றார் என்றால் - எங்கே " ஒரே நாடு , ஒரே சட்டம்" என்ற கேள்வி எழுகிறது.


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வின் கொள்கை பிரகடனத்தை மீறியிருக்கும் இந்த பிரதேச செயலாளர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது யார்? பாதிக்கப்பட்டுள்ள - இந்த பட்டதாரி முஸ்லிம் பெண்ணுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது யார் ? அவரது தொழிலுக்கு யார் உத்தரவாதம் ?


Boomudeen Malik - முகநூல் பக்கம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்