சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரருக்கு கொவிட்-19 தொற்று!

 




புதிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலர் மாகல் கந்தே சுதத்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுதத்த தேரரின் சாரதிக்கு கொரோனா தொற்று முதலில் உறுதியான நிலையில், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்போதே தேரருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இதன்படி ,சுதத்த தேரர் தற்போதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தொற்றுக்குள்ளானதாகக் கூறபப்டுகின்றது.


எவ்வாறாயினும், கடந்த 8 ஆம் திகதி, இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரரின் தயாரின் பூதவுடலுக்கு, கொழும்பு – ஜயரத்ன மலர்ச் சாலையின் விசேட பிரமுகர் பகுதியில் மாகல்கந்த சுதத்த தேரர் அஞ்சலி செலுத்தியிருந்தார். குறித்த இறுதி நிகழ்வுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி உள்ளிட்ட பல அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


இவ்வாறான நிலையில், இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாரின் பூதவுடல், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலிலும் பொரளையில் இருந்து இரத்தினபுரி – இத்தேகந்த பகுதிக்கு வாகன ஊர்வலத்தில் பல நூறு பேரின் பங்கேற்றலுடன் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.


மேலும் ,இவ்வாறான பின்னணியிலேயே, குறித்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட மாகல்கந்தே சுதத்த தேரருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்